ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதிஉதவி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்திய அரசு 2015-16 முதல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி, தகுதியுள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு நிதி உதவி செய்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் தகுதியுள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மற்ற அடிப்படை வசதிகளான வீட்டுக் கழிப்பறைகள், எல்பிஜி இணைப்பு, மின்சார இணைப்பு, வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு போன்ற வசதிகளும் மத்திய, மாநில அரசுகளின் பிற திட்டங்களுடன் சேர்ந்து வழங்கப்படுகின்றன.
சூரியனில் என்ன நடக்குது? ஆதித்யா எல்-1 எடுத்த புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு அரசு நிதிஉதவி வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது pic.twitter.com/zgFMjwEDbx
— Asianetnews Tamil (@AsianetNewsTM)தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கூடுதல் வீடுகள் கட்டுவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக 3வது முறையாக கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
15,000 கொசுக்களுக்கு ரத்த தானம்! விபரீத ஆராய்ச்சியில் இறங்கியுள்ள 'கொசு மனிதன்'!