எதிரிகள் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை... அமித்ஷா திட்டவட்டம்..!

By vinoth kumarFirst Published Jan 21, 2020, 6:08 PM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெறப்படமாட்டாது. வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் குருடாகி விட்டது. பிரிவினைக்கு வித்திட்டது காங்கிரஸ் தான் என குற்றம்சாட்டினார். 

அயோத்தியில் வானத்தைத் தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி 3 மாதங்களுக்குள் தொடங்கும் என அமித்ஷா கூறியுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அதில், யாருடைய குடியுரிமையையும் பறிக்க திருத்தப்பட்ட சட்டத்தில் எந்தவிதமான விதிகளும் இல்லை. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெறப்படமாட்டாது. வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் குருடாகி விட்டது. பிரிவினைக்கு வித்திட்டது காங்கிரஸ் தான் என குற்றம்சாட்டினார். 

எந்த விலை கொடுத்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற போவதில்லை என்பதை எதிரிகளுக்கு பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன். யாருடைய குடியுரிமையும் பறிக்கலாம் என்று அந்தச் சட்டத்தில் இல்லை. மாறாக, சிலருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றுதான் உள்ளது. இந்த கண் தெரியாத, காது கேட்காத தலைவர்களுக்கு சிறுபான்மையினர்கள் மீது நடத்தப்படும் துன்புறுத்தல்கள் தெரியாது. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடிக் கொள்ளுங்கள். குடியுரிமைச் சட்டம் திரும்ப பெறப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், அயோத்தியில் வானத்தைத் தொடும் ராமர் கோவில் கட்டுமானப்பணி 3 மாதங்களுக்குள் தொடங்கும் என கூறினார்.

click me!