புதுச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை கொடுக்கப்பட்டதால் முண்டியடித்து சென்ற மக்கள் பிரியாணியை வாங்கி சென்றனர்.
பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பலரின் ஃபேவரைட் உணவு என்றால் அது பிரியாணி தான். தினமும் பிரியாணியை கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடும் பலர் இருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பகுதியில் ஒரு பிரியாணி கடை தான் இருக்கும். ஆனால் ஒரு தெருவிலேயே பல பிரியாணி கடைகள் முளைத்திருக்கின்றன. மக்கள் மத்தியில் பிரியாணி மீதான மோகம் எந்தளவு அதிகரித்துள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்.
எனவே புதிதாக பிரியாணி கடைகள் திறக்கப்படும் போது, அதிரடி சலுகைகளை வழங்குவதை வழக்கமாக உள்ளது. அந்த வகையில் புதுச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை கொடுக்கப்பட்டதால் முண்டியடித்து சென்ற மக்கள் பிரியாணியை வாங்கி சென்றனர்.
புதுச்சேரி புஸ்ஸி வீதியில் மெட்ராஸ் வெட்டிங் பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது. இந்த கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கடை திறந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரியாணிக்கு வாங்கினால் சலுகையாக மற்றொரு பிரியாணியை வழங்கினர். இதனால் பிரியாணி பிரியர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததன் காரணமாக நீண்ட வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சென்றனர்.
இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா? நெல் மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. வைரல் வீடியோ..
பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்த நிலையில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துகொண்டு பிரியாணியை வாங்கியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு காரணமாக பிரியாணியை விரைவாக வாங்கி செல்லுமாறு போலீசார் அறிவுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.