
உத்தரப்பிரதேசம் மாநில மக்களுக்கு நலம் தரும் வகையில், ரூ.60,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர்நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். பாஜகபதவியேற்ற நாள் முதலாக, அம்மாநில மக்களை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை மத்திய அரசும், மாநில அரசும்அறிவித்து வருகின்றன. இதன்படி, உத்தரப்பிரதேச மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தற்போது தொழில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.இந்த தொழில் மாநாட்டில், குமார் மங்கலம் பிர்லா, கவுதம் அதானி, சுபாஷ் சந்திரா உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்கள்பங்கேற்றுள்ளனர்.
இதில், பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர்,‘’உத்தரப்பிரதேச வளர்ச்சிக்காக, ரூ.60,000 கோடி முதலீட்டில் 81 தொழில் திட்டங்கள் தொடங்கப்படும். இவற்றின் மூலமாக, 2லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். மாநிலத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும், என அறிவித்தார்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுக்குஇடையே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் பலவும் மத்திய அரசின் அம்ருத் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாதிட்டங்களின் கீழ் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபோல, முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், மாநிலத்தில்பொருளாதார நடவடிக்கைகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது, எனக் குறிப்பிட்டார்.
இதுபோலவே, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, உத்தரப் பிரதேச மாநில மக்களின் நலனில் மத்திய அரசு அக்கறைகொண்டுள்ளதாகக் கூறினார். இவர், லக்னோ தொகுதி மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், நாட்டின் மற்றமாநிலங்களுக்கு இல்லாத வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு பாஜக முக்கியத்துவம் தருவது ஏன் என்று எதிர்க்கட்சிகள்விமர்சனம் தெரிவித்துள்ளனர். இந்த முதலீட்டில் எத்தனை திட்டப் பணிகள் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்றும், அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.