ஆட்டையும் விட்டுவைக்காத காமக்கொடூரன்கள்...கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்து கொன்ற மனித மிருகங்கள்!

 
Published : Jul 30, 2018, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
ஆட்டையும் விட்டுவைக்காத காமக்கொடூரன்கள்...கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்து கொன்ற மனித மிருகங்கள்!

சுருக்கம்

Pregnant goat dies after 8 men gang rape it in Haryana

ஆட்டை 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் அரியானாவில் அரங்கேறியுள்ளது. அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள மேவட் பகுதியில் அஸ்லு என்பவர் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவரது ஆடு சினையாக இருந்துள்ளது. அஸ்லு என்பவர் தனது ஆடு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறது என காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிராக பாலியல் பலாத்காரங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காம வெறியர்களின் பலாத்கார செயல்கள் விலங்குகள் மீதும் திரும்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25ம் தேதி இரவு தனது ஆட்டை 8 பேர் திருடிச்சென்றதாகவும், அவர்கள் குடிபோதையில் ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்ட காவல்துறையினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், ஆடு இறந்ததற்கான காரணம் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும் என்றனர். இது தொடர்பாக ஆட்டின் உரிமையாளர் அஸ்லு பேசும்போது, எட்டு பேரும் என் ஆட்டை பழைய கட்டடத்திற்கு எடுத்து சென்றனர். அவர்களை நான் தடுத்தேன். போலீசில் புகார் தெரிவிப்பதாக கூறினேன்.

ஆனால் அவர்கள் நான் சொன்னதை பொருட்படுத்தாமல் நீ என்னவேண்டுமானாலும் செய், நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றனர். அவர்களுக்கு தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், சிறை செல்ல பயமில்லை என்றும் கூறினர். ஒரு ஆட்டை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது என்ற செய்தி பலர் மத்தியில் அதிர்ச்சியையும், சமூகம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்
வரிவிதிப்பு சிக்கல் முடிந்தது! இந்தியா-நியூசிலாந்து FTA-ஆல் ஏற்றுமதி-இறக்குமதி எளிதாகும்