ஜி.எஸ்.டி.யில் ‘ரிட்டன் தாக்கலுக்கு’ ஒரு ஆண்டு அவகாசம் தேவை…மத்திய அரசுக்கு வர்த்தகர்கள் கோரிக்கை

Asianet News Tamil  
Published : Jun 30, 2017, 07:23 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
ஜி.எஸ்.டி.யில் ‘ரிட்டன் தாக்கலுக்கு’ ஒரு ஆண்டு அவகாசம் தேவை…மத்திய அரசுக்கு வர்த்தகர்கள் கோரிக்கை

சுருக்கம்

Businessmen need one year time to submit the income tax return

நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) நடைமுறைக்கு இன்று வந்துள்ளநிலையில் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஒரு ஆண்டு கருணைக் காலம் ஒதுக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு வர்த்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரி

மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, நாடுமுழுவதும் ஒரே வரி முறையான ஜி.எஸ்.டி அமலுக்கு வந்துள்ளது. இந்த வரி முறையில் 5, 12, 18, 28 நான்கு நிலைகளில் வரி விதிக்கப்படுகிறது.

குழப்பம், போராட்டம்

ஆனால், வரி விதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ள பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஜி.எஸ்.டி.க்கு எதிராக வர்த்தகர்கள், பல்வேறு தொழில்துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒரு நாடு, ஒரு வரி

இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் வர்த்தக மற்றும் தொழில்கூட்டமைப்பின் தலைவர் ரவிந்திர மோடி கூறுகையில், “ ஜி.எஸ்.டி. வரியில் பல்வேறு படிநிலையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு நாடு, ஒரு வரி என்ற ரீதியில் வரிவிதிப்பு செயல்படுத்தப்படுகிறது.

குழப்பான விதிகள்

இந்த ஜி.எஸ்.டி.வரிக்கு ஏற்றார்போல் நாடு முழுவதும் சிறுமுதல் நடுத்தர வர்த்தகர்கள் மாறிக்கொள்ள குறைந்தபட்சம் 6 மாதங்கள் தேவைப்படும். ஏனென்றால், ஜி.எஸ்.டி. வரியில் பல குழப்பான அறிவிப்புகள், விதிகள் உள்ளன. இது குறித்து குறிப்பிட்ட அரசு அதிகாரிகளுக்கே புரியவில்லை.

அமல்படுத்தி கற்கிறோம்

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவது என்பது வரலாற்று நிகழ்ச்சிதான். சுதந்திரத்துக்கு பின், அரசு செயல்படுத்தும் மிகப் பெரிய சீர்திருத்தம்தான். ஆனால், சில விஷயங்களை  தெளிவு படுத்த வேண்டும். நாம் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்திவிட்டு தான் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம்.

ஒருஆண்டு அவகாசம்

ஏராளமான வர்த்தகர்கள், சேவை வழங்குவோர்கள் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். வரி செலுத்துவோர்களுக்கு ரிட்டன் தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசு, ஒரு ஆண்டுக்காவது,வர்த்தர்கள் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய கருணைக்காலம் அளிக்க வேண்டும். ஏனென்றால், சிறிய வர்த்தகர்களும் இதில் இணைய வேண்டும்.

உதாரணமாக, இனிப்புகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது, அதேசமயம், சாக்லேட்களுக்கு 18 சதவீதம்வரி இருக்கிறது. இப்படி ஒரே பொருட்களுக்கு இரு விதமான வரி இருக்கறது’’ எனத் தெரிவித்தார்.


 

PREV
click me!

Recommended Stories

கான்ஃபிடன்ஸ் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் தற்கொ**லை.. துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பக்தர்களுக்கு நிம்மதி! திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இல்லை! சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!