அரைவேக்காட்டுத்தனமாக ஜி.எஸ்.டி. அமல் - மத்திய அரசை போட்டு தாக்கிய ராகுல் காந்தி

Asianet News Tamil  
Published : Jun 30, 2017, 05:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
அரைவேக்காட்டுத்தனமாக ஜி.எஸ்.டி. அமல் - மத்திய அரசை போட்டு தாக்கிய ராகுல் காந்தி

சுருக்கம்

rahul gandhi condemns gst

நாட்டில் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு, சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அமல்படுத்துவது வித்தை காட்டுவதுபோல் இருக்கிறது. அரைவேக்காட்டுத் தனத்துடன், சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளவே வேகமாக அமல்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

போராட்டம்

நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி. வரியில் பல்வேறு குழப்பமான விதிகள், வரிவிதிப்புகள் உள்ளன, அதிகமான வரி இருக்கிறது எனக் கோரி பல்வேறு மாநிலங்களில் வர்த்தகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புறக்கணிப்பு

மத்தியஅரசு சார்பில், நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

டுவிட்டரில்

இந்நிலையில், விடுமுறைக்காக இத்தாலி சென்று இருந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஜி.எஸ்.டி. அமல்படுத்துவது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் டுவிட்டரில் வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தயாரில்லை

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை எந்தவிதமான திட்டமிடல், எதிர்காலக் கண்ணோட்டம், கட்டமைப்புகள் தயார் நிலையில் இல்லாமல் அமல்படுத்துகிறது.

அரைவேக்காட்டுத்தனம்

வரிச் சீர்திருத்தம் என்று சொல்லக்கூடிய ஜி.எஸ்.டிக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. ஆனால், அதை அரைவேக்காட்டுத்தனமாக, சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் நோக்கில், வேகமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஏதோ வித்தைகாட்டுவதுபோல் இருக்கிறது.

மக்கள் வேதனை

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான சாமானிய மக்கள், சிறிய வர்த்தகர்கள், தொழில்செய்பவர்களை மிகப்பெரிய வேதனைக்கு உள்ளாக்கி, அச்சத்தில் நிறுத்தி ஜி.எஸ்.டி. வரி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

திட்டமிடல் இல்லை

ரூபாய் நோட்டு தடையைப் போல் அல்லாமல், இதை அமல்படுத்தக்கூடாது. ஜி.எஸ்.டி. எனும் சீர்திருத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே ஆதரவாக இருந்து போராடியது. ஆனால், ரூபாய் நோட்டு தடையைப் போல், ஜி.எஸ்.டி. ஒரு தகுதியற்ற வகையில், அறிவுப்பூர்வமற்ற வகையில், திட்டமிடல் இன்றி, தொலைநோக்கு பார்வையின்றி, கட்டமைப்புகள் இன்றி மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே இங்கு வரி அதிகம்

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “ மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில், மிக அதிகமான வரி வீதத்தில் ஜி.எஸ்.டி.யை நடைமுறைப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சி 18சதவீதம் தான் அதிகபட்ச வரி இருக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், இப்போது 40சதவீதம் வரி இருக்கிறது.

5 வகையான வரி விதிப்பு படிநிலைகளில் ஜி.எஸ்.டி.யில் வரி விதிப்பு முறை இருக்கிறது. இது சிறுகடைகள் வைத்து இருப்போர், வர்த்தகர்கள், சிறிய தொழில்செய்வோரை கடுமையாக பாதிக்கும்.

காங்கிரஸ் கட்சி ஜி.எஸ்.டி. மசோதாவை, எளிமையாக, ஒரு வரியாக, வௌிப்படைத்தன்மை உள்ளதாக, குழப்பம் இல்லாததாக, பணவீக்கத்தை குறைக்கும் விதமாக கொண்டு வர முடிவு செய்தது. ஆனால், இப்போது வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி முற்றிலும்ேநர் மாறாக இருக்கிறது. குழப்பமாகவும், அதிகமான செலவு பிடிக்கும் விதத்தில் இருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் ஜி.எஸ்.டி. வரிக்கு தயாராகவில்லை. இந்த புதிய வரி ஏழைமக்கள், நடுத்தரமக்கள், விவசாயிகள், சிறு வர்த்தகர்களை கடுமையாக பாதிக்கும்’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
LPG Scam Alert: Indane & HP Gas Alert: ஆன்லைன் கேஸ் புக்கிங்கில் நடக்கும் நூதன மோசடிகள்..!