
திருவண்ணாமலை அடுத்த செங்கத்தில் கர்நடாக பஸ் மீது கல்வீச்சு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை சற்று முன் முடிந்தது.
முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட சற்று நேரத்தில், அனைத்து ஊடகங்களிலும் வெளியானதால், தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன் திரண்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கர்நாடகா அரசு பஸ் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. செங்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே பைக்கில் வந்த மர்மநபர்கள் 2 பேர், பஸ் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எவ்வித காயமும் இல்லை. அதேபோல், அவ்வழியாக சென்ற மற்றொரு பஸ் மீது, தண்ணீரை தண்ணீரை பீய்ச்சி அடித்து தாக்கினர்.
தகவலறிந்து செங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள் மர்மநபர்கள், அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. இதையடுத்து, அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ்கள் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் கர்நாடக அரசு பஸ்கள் தற்காலிகமாக எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.