விபத்தில் சிக்கிய திருமண விருந்தினர்கள் சென்ற பேருந்து - 30 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்!

By Ansgar R  |  First Published Oct 5, 2024, 4:08 PM IST

நேற்று வெள்ளிக்கிழமை இரவு உத்தரகாண்டின் பௌரி மாவட்டத்தில் திருமண விருந்தினர்கள் சென்ற பேருந்து 200 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வெள்ளிக்கிழமை இரவு உத்தரகாண்டின் பௌரி மாவட்டத்தில் திருமண விருந்தினர்கள் சென்ற பேருந்து 200 அடி பள்ளத்தில் விழுந்ததில் மகிழ்ச்சியான அந்த திருமண கொண்டாட்டம் பேரழிவாக மாறியுள்ளது. இந்த பயங்கரமான விபத்தில் குறைந்தது 25 முதல் 30 பேர் வரை இறந்திருக்கலாம் என்று பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ மரண எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஹரித்வாரில் உள்ள லால்தாங்கில் இருந்து பௌரியில் உள்ள பிரோன்கால் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் சுமார் 40 முதல் 50 திருமண விருந்தினர்கள் பயணம் செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த சோகச் சம்பவம் குறித்த செய்தி பரவியதும், உத்தரகாண்ட் சட்டமன்ற சபாநாயகர் ரீது கந்தூரி சம்பவ இடத்திற்கு விரைந்தார். ஆனால் அங்கு தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து கிராம மக்கள் வேதனையில் இருந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஹைபாக்ஸ் ஆப் மூலம் ரூ.500 கோடி மோசடி! முக்கிய நபர் சென்னையில் கைது! விளம்பரம் செய்தவர்களுக்கும் ஆப்பு!

இந்த விபத்து இரவு 8 மணியளவில் மணப்பெண் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிமாண்டி கிராமம் அருகே நடந்துள்ளது. பேருந்தின் ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. பேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பயணிகள் உதவிக்காக அலறிய நிலையில், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

உள்ளூர் காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் மிகப்பெரிய ரயில் சந்திப்பு நிலையம் எது தெரியுமா? 2வது இடத்தில் நம்ப மாம்பழம் சிட்டி

click me!