
இமாச்சலப்பிரதேத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இமாச்சலப்பிரதே மாநிலம் சிம்லாவில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.டோன்ஸ் நதி அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததாகக் கூறப்படுகிறது. தாறுமாறாக ஓடிய பேருந்து தடுப்புச் சுவர்களை உடைத்து 60 அடி ஆழ பள்ளத்தில் தலை குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் இவ்விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை தற்போது 45 ஆக அதிகரித்துள்ளது.