நிதி ஆண்டை ஜனவரி-டிசம்பர் மாதத்துக்கு மாற்ற திட்டம் - 150 ஆண்டு கால ஏப்ரல்-மார்ச் முறை கைவிட முடிவு..!!

 
Published : Mar 18, 2017, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
நிதி ஆண்டை ஜனவரி-டிசம்பர் மாதத்துக்கு மாற்ற திட்டம் - 150 ஆண்டு கால ஏப்ரல்-மார்ச் முறை கைவிட முடிவு..!!

சுருக்கம்

budget system will changed to jan dec

நாற்றூண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டு காலத்தை கைவிட்டு, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டையே நிதியாண்டாக மாற்ற நாடாளுமன்றக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

நம் நாட்டில் நிதியாண்டு என்பது ஆங்கிலேயர்கள் காலத்து முறையாக ஏப்ரல் 1-முதல் மார்ச் 31ந் தேதி வரை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறை என்பது கடந்த 1867ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. 1867ம் ஆண்டுக்கு முன்பு, நிதியாண்டு என்பது மே 1 முதல் ஏப்ரல் 30வரை என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. 

இந்நிலையில் நூற்றாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் நிதி ஆண்டு முறையை மாற்றுவது குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித்துறைக்கான நிலைக்குழு பரிந்துரை செய்தது. 

அந்த பரிந்துரையில் பட்ஜெட்டை ஒரு மாதம் முன்பாக பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்ததை நிலைக்குழு விமர்சனம் செய்துள்ளது. இது போல்  ஒரு மாதம் முன்பாக பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்யும்போது, முன்கூட்டியே அதிகமாக தயாராகுதல், அதிகமான களப்பணிகள் ஆகியவற்றை செய்து இருக்க வேண்யும்

மேலும், அடுத்த ஆண்டில் இருந்து பணிகளை செய்ய வேண்டும் என நிலைக்குழு எதிர்பார்க்கிறது. பல தடைகளை கருத்தில் கொண்டு, நிதியாண்டையும், காலண்டர் ஆண்டுக்கு மாற்றி, அதன்பின்பட்ஜெட் தேதியை ஒரு மாதம் முன்பாக மாற்றி இருக்கலாம்.

அமைச்சகங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நிதியாண்டு தொடக்கத்தில் இருந்தே செலவு செய்ய ஏதுவாக, பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1-ந் தேதி செய்யப்பட்டது. மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்துவிதமான கோரிக்கைகளும், விவாதங்களும் முடிக்கப்பட்டால் அடுத்த நிதியாண்டு எளிதாகச் செல்லும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ேமலும், நிதியாண்டை ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ஜனவரி 1-ந் தேதிக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு ஒன்றையும் மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. அந்த குழு கடந்த டிசம்பரில் அறிக்கையை தாக்கல் செய்தது. விவேக் தீப்ராய் தலைமையிலான நிதி அயோக்குழுவும் நிதியாண்டை ஏப்ரல் மாதத்தில் இருந்து காலண்டர் மாதத்துக்கு மாற்ற ஒப்புதல் அளித்தது.

நிதியாண்டை மாற்றும் போது, பல்வேறு சட்டங்களில் திருத்தங்களும், வரிச்சட்டங்களில் மாற்றங்களும் கொண்டு வர வேண்டியது அவசியம்.

பட்ஜெட் மதிப்பீட்டுக்கும், பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்குவதிலும் பல்வேறு சீரற்ற தன்மை இருக்கிறது என்று நிலைக்குழு தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!