Mallikarjun Kharge: அதானி விவகாரத்தில் பிரதமர் பதில் சொல்லி ஆகணும்! கார்கே திட்டவட்டம்

By SG BalanFirst Published Feb 6, 2023, 12:40 PM IST
Highlights

அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றம் கூடும் முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.

நாடாளுன்றத்தில் உள்ள காந்தி சிலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஆளும் கட்சி இந்த விவகாரம் பற்றி விவாதிக்கக் கூடாது என நினைக்கிறது. அவர்கள் இதை எப்படியாவது தவிர்க்க விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும், "எங்கள் நோட்டீஸ் மீது விவாதம் நடத்த வேண்டுகிறோம். விரிவான விவாதத்திற்குத் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். குடியரசுத் தலைவர் உரையை முன்வைத்தும் விவாதிக்க ஆயத்தமாக உள்ளோம். அதற்கும் உரிய முக்கியத்துவம் அளிப்போம். ஆனால் அதானி குழும விவகாரத்துக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும். அதற்குத்தான் முன்னுரிமை" என்றும் கார்கே கூறியுள்ளார்..

கர்நாடகாவில் HAL ஹெலிகாப்டர் தொழிற்சாலை, சென்னைக்கு சிறப்பு திட்டம்:பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்

இதனிடையே காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் மூன்றாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது

click me!