இன்று தொடங்குகிறது 2 ஆம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்… பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்…

 
Published : Mar 09, 2017, 08:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
இன்று தொடங்குகிறது 2 ஆம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்… பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்…

சுருக்கம்

Parliment session commence

இன்று தொடங்குகிறது 2 ஆம் கட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்… பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி கூட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது  2ஆம் கட்ட  கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்  கடந்த மாதம் 9-ந் தேதி முடிவடைந்தது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றதால் பட்ஜெட்  கூட்டத் தொடருக்கு ஒரு மாத இடைவெளி விடப்பட்டது.

இந்நிலையில்  5 மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் நாடாமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 13-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவதற்கு தயாராகி வருகின்றன.

பண மதிப்பிழப்பு  நடவடிக்கையால் கருப்பு பணத்தை ஒழிக்க முடிந்ததா என்று 2 அவைகளிலும் விரிவான விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்தல், தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டது ஆகிய பிரச்சினைகளை அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் இரு அவைகளிலும் எழுப்ப திட்டமிட்டு உள்ளனர்.

தமிழக மீனவர் படுகொலை தொடர்பாக டெல்லி மேல்-சபையில் சிறப்பு விவாதம் நடத்தவும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தி இருக்கிறார்.

பரபரப்பான இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.

 

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்