
பயிர் காப்பீடு மற்றும் இலவச கேஸ் இணைப்புக்கு ஆதார் அட்டை அவசியம்….மோடி அரசின் அடுத்த அதிரடி….
ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச கேஸ் இணைப்புக்கு சூதார் அட்டை கட்டாம் வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இல்லாவர்கள் வரும் மே மாதத்திற்குள் ஆதார்த அடையை சமர்ப்பிக்க வேண்டும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் வகையில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில் கேஸ் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
தற்போது ஆதார் எண் இல்லாதவர்கள் வரும் மே மாதம் 31–ந் தேதிக்குள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து, அதற்கான ரசீது அல்லது ஆதார் விண்ணப்ப நகலை இணைக்க வேண்டும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
மேலும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பான்கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒரு அரசு அடையாள ஆவணத்தின் நகலையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று விவசாயிகள் பயிர் காப்பீடு பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி ஏப்ரல் 1–ந் தேதி முதல் பயிர் சேதம், வறட்சி காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு பெற அவர்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய விவசாய துறை அமைச்சகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.