நடை மேம்பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து !! - 5 பேர் உயிரிழந்த பரிதாபம் !!

Published : Mar 14, 2019, 11:17 PM IST
நடை மேம்பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து !! - 5 பேர்  உயிரிழந்த பரிதாபம் !!

சுருக்கம்

மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம்  திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம்.  இன்று மாலை வேலை முடிந்து  ஏராளமான பொதுமக்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கூட்டம் அதிகமாக இருந்த பிளாட்பாரம் ஒன்றினை இணைக்கும் நடை மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அதன்கீழ் சென்ற பலர் சிக்கிக் கொண்டனர். முதலில்  20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

உடனடியாக அப்பகுதியில் மீட்பு பணிகள் தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது.

 காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே 5 பேர் இந்த விபத்தில் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாகனங்கள் அவ்வழியாக செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காலையில் மேம்பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது என்றும் கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?
2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு