அபிநந்தன் புகைப்படத்துடன் பாகிஸ்தானில் டீ விற்பனை... அபிநந்தனால் பிரபலமான டீக்கடை...!

By Asianet Tamil  |  First Published Mar 14, 2019, 7:21 AM IST

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஒரு டீக்கடையில் அபிநந்தன் டீ குடிக்கும் காட்சியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அபிநந்தன் புகைப்படத்துக்கு அருகே, ‘இந்தக் டீக்கடையின் டீ, எதிரிகளை நண்பராக்கும்’ என்ற வாசகமும் உருதுவில் இடம் பெற்றுள்ளது.


இந்திய விமானப்படை விக் கமாண்டர் அபிநந்தனின் புகைப்பட போஸ்டரை பாகிஸ்தானில் டீக்கடை ஒன்றில் வைத்திருப்பது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.


காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தத்தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் விமானப் படையும் தாக்குதல் நடத்த இந்திய எல்லைக்குள் வந்தபோது, அந்த விமானத்தை இந்திய விமானங்கள் துரத்தின. இந்தச் சம்பவத்தின்போது இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கினார். 
பாகிஸ்தான் பிடியில் அபிநந்தன் இருந்தபோது அபிநந்தனை விசாரிக்கும் காட்சிகள் வீடியோவாக வெளிவே வந்தன. அதில் டீ அருந்திகொண்டு அவர் கேஷுவலாகப் பேசிய காட்சிகள் இருந்தன. இதன்பின்னர், இந்தியா வசம் அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது. இந்தச் சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் அபிநந்தன் பிரபலமடைந்தார்.
 இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஒரு டீக்கடையில் அபிநந்தன் டீ குடிக்கும் காட்சியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. வீதியோர டீக்கடையாக அது இருந்தாலும், இந்த போஸ்டரை வைத்திருந்தார். மேலும் அபிநந்தன் புகைப்படத்துக்கு அருகே, ‘இந்தக் டீக்கடையின் டீ, எதிரிகளை நண்பராக்கும்’ என்ற வாசகமும் உருதுவில் இடம் பெற்றுள்ளது.
அபிநந்தன் புகைப்படம் உள்ள அந்த டீக்கடை பற்றிய செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து இந்தத் தகவல் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் வைரலானது. பலரும் இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார்கள். இதன் காரணமாக, வீதியோர அந்த டீக்கடை கராச்சியில் பிரபலமாகிவிட்டது.

Latest Videos

click me!