மத்திய அமைச்சர் மீது சரமாரி கற்கள் வீச்சு...

 
Published : Oct 20, 2016, 11:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
மத்திய அமைச்சர் மீது சரமாரி கற்கள் வீச்சு...

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சராக இருப்பவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பாபுல் சுப்ரியோ ( 45). திரைத்துறையில் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஆவார்.

பாபுல் சுப்ரியோ, அங்க் அசன்சோல் பகுதிக்கு பா.ஜ.க. தொண்டர்களுடன் நேற்று சென்றார். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவர் மீது செங்கல்களை வீசி தாக்கினர். அதில் ஒரு கல்,காரின் படிக்கட்டில் நின்ற அவரது மார்பில் விழுந்தது. இதனால், காயமடைந்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 57 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து துர்காபூர்-அசன்சோல் கமிஷனர் மீனா கூறுகையில், “திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான மலாய் காட்டக் வீட்டை முற்றுகையிட பா.ஜ.க.வினர் திட்டமிட்டனர். அப்போதுதான் பிரச்சனை ஏற்பட்டு, பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டார் என கூறினார். 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!