காவிரி வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

 
Published : Oct 20, 2016, 07:08 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
காவிரி வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

சுருக்கம்

காவிரி நதிநீர் வழக்கில் தேதி குறிப்பிடாமல் உச்சநிதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. அதே நேரத்தில் தீர்ப்பு வரும் வரை தமிழகத்துக்கு, வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறக்கவும் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய தொழில்நுட்ப குழு அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், 

கர்நாடகா மற்றும் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன்படி மத்திய தொழில்நுட்ப குழு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய தொழில்நுட்ப குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இன்று விசாரணைக்கு வந்த காவிரி நதிநீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. மத்திய அரசு, நான்கு மாநில அரசுகளும், எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்க்கும் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்தது. இதேபோல் உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என புதுச்சேரி அரசும் வாதம் செய்தது.

ஆனால், மத்திய அரசு வாதத்துக்கு மாறான வாதங்களை தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்கள் முன் வைத்தன. நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை எதிர்க்கும் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பின்னர் அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. மேலும், தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை தொடர்ந்து விட வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை கர்நாடகம் தண்ணீரை விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!
மகாராஸ்டிரா உள்ளாட்சி தேர்தலிலும் அடித்து தூக்கிய பாஜக..! உத்தவ், சரத் பவார் மொத்தமா காலி