காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு: 2024 தேர்தலில் பாதிப்பு?

By Manikanda Prabu  |  First Published Oct 18, 2023, 2:13 PM IST

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை முறிவு மக்களவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது


மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுக்கள் முறிவு ஏற்பட்டிருப்பது, 2024ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இந்திய கூட்டணித் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் 80 மக்களவைத் தொகுதிகளிலும் தங்களது கட்சி போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 9 வேட்பாளர்களை அறிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி மேலும் 35-40 வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

undefined

“இந்தியா கூட்டணி தேசிய அளவில் உள்ளதா அல்லது மாநில அளவில் உள்ளதா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். இது மாநில அளவிலான கூட்டணி இல்லை என்றால், எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களிலும் கூட்டணியாக இருக்காது. 2024இல் உத்தரப்பிரதேசத்தில் சீட் பகிர்வு ஒப்பந்தம் குறித்த போலியான ஊடக அறிக்கைகளை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாதி கட்சி முழுப்பொறுப்புடன் வியூகத்தை தயாரித்து வருகிறது.” என்றார் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கானது மட்டுமே. ஆனால், சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக காங்கிரஸின் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் கூறியிருந்தார். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 1 மணி வரை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அது தோல்வியில் முடிந்ததாக அகிலேஷ் யாதவ் கூறினார்.

அதேசமயம், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வலுவான நிலையில் இருப்பதால் அங்கு சமாஜ்வாதி கட்சி போட்டியிட வேண்டாம் என்று கூறிய உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளிலும் போட்டியிட தங்களது கட்சி தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. செல்வாக்கு குறைவாக இருக்கும் போது, அதன் கோரிக்கைகளை அதிகரிக்கக் கூடாது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், உத்தரப்பிரதேசம் - மத்தியப்பிரதேச எல்லைக்கி அருகே உள்ள மத்தியப்பிரதேச தொகுதிகளில் தங்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக சமாஜ்வாதி கட்சி கருதுகிறது.

தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல்; யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ!

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் ஒரு முக்கிய மாநிலமாக உள்ளது, ஏனெனில் அது அதிகபட்சமாக 80 எம்.பி.க்களை மக்களவைக்கு அனுப்புகிறது. அம்மாநிலத்தில் 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற பேச்சு வார்த்தைகளில் சமாஜ்வாதி கட்சி ‘பெரிய அண்ணனாக’ காட்டிக் கொள்வது காங்கிரஸ் கட்சியை அதிருப்தியடைந்துள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் மீது சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டுகிறது.

காங்கிரஸுடனான தனது உறவை மேலும் சீர்குலைக்கும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் வேட்பாளர்களை நிறுத்த சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, உத்தரப் பிரதேசத்தில், காங்கிரஸுக்கு 2-3 மக்களவைத் தொகுதிகளுக்கு மேல் ஒதுக்குவதற்கு சமாஜ்வாதி கட்சி தயாராக இல்லாத நிலையில், தற்போதைய மோதல் அதையும் பாதிக்கச் செய்யலாம் என்கிறார்கள்.

click me!