கங்கை நீரில் குளித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கை 5 வயது சிறுவன் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கங்கை நீரில் குளித்தால் புற்றுநோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கை 5 வயது சிறுவன் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தங்கள் மகனை கங்கை நீரில் குளிக்க வைத்தால் நோய் குணமாகும் என்ற அச்சிறுவனின் பெற்றோர் நம்பி உள்ளனர்.
இதற்காக ஹரித்வார் செல்ல முடிவு செய்த பெற்றோர் நேற்று காலை 9 மணிக்கு டெல்லியில் மணியளவில் ஹரித்வாருக்கு புறப்பட்டனர். சிறுவனின் பெற்றோர், சிறுவன், மற்றும் அந்த சிறுவனின் அத்தை ஆகியோர் காரில் சென்றதாஅ கூறப்படுகிறது. சிறுவன் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். டெல்லியில் மருத்துவர்கள் கைவிட்டதால் கங்கை நதிக்கு செல்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஹரித்வார் சென்ற அவர்கள் கங்கை நீரில் அச்சிறுவனை மூழ்கடித்துள்ளனர். சிறுவனின் பெற்றோர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது அவனின் அத்தை என்று கூறப்படும் பெண் சிறுவனை கங்கையில் மூழ்கடித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் சிறுவன் நீண்ட நேரம் தண்ணீருக்குள் இருப்பதை கவனித்து, சிறுவனை வெளியே இழுக்கும்படி கூறியுள்ளனர்.
अंधविश्वास ने एक 7 साल के बच्चे की जान ले ली ...!!
ब्लड कैंसर से पीड़ित बच्चे को उसकी मौसी ने चमत्कार की आस में करीब पांच मिनट तक गंगा में डुबकियां लगवा दीं ....!!
बच्चे की मौत हो गई है ....!! pic.twitter.com/kLCPcHsIY8
ஆனால் அவரின் அத்தை கேட்காததால் அங்கிருந்தவர்களே சிறுவனை நீரில் இருந்து மீட்டுள்ளனர். உடனடியாக அந்த சிறுவனை மருத்துவனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிறுவனின் ஆயுளை நீட்டிக்க எடுத்த முயற்சிகள் அவரைக் கொன்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
ஹரித்வார் நகர காவல்துறைத் தலைவர் ஸ்வந்தந்திர குமார் இதுகுறித்து பேசிய போது, சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள உயர்மட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். இறுதியில் மருத்துவர்கள் தங்கள் குழந்தையை காப்பாற்ற முடியாது என்று கைவிட்டனர்.
எனவே கங்கை நதி சிறுவனை குணப்படுத்தும் என்று குடும்பத்தினர் நம்பி, அவரை இங்கு அழைத்து வந்துள்ளனர். நாங்கள் டெல்லி மருத்துவமனையில் இருந்து அறிக்கைகளைப் பெற உள்ளோம், ஆனால் இந்த நேரத்தில், கங்கா ஸ்னான் அவரைக் குணப்படுத்தும் என்று நம்பியதால் அவர்கள் சிறுவனை இங்கு அழைத்து வந்ததாகத் தெரிகிறது," என்று அவர் கூறினார்.