
பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு நாள்தோறும் ஏராளமான புகார் கடிதங்கள், குறைகளை தீர்க்க விண்ணப்பங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், இளைஞர் ஒருவர் தனது காதலியை தன்னிடம் சேர்த்து வைக்க கோரி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சண்டிகரைச் சேர்ந்த அந்த இளைஞர் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்து வருகிறார், ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரியும் தனது காதலியை சேர்த்து வைக்க பிரதமர் மோடிக்கு அந்த இளைஞர் கடிதம் எழுதியுள்ளார்.
சண்டிகர் வரும்போது, தனது குடும்பத்தாரிடமும், பெண்ணின் குடும்பத்தாரிடமும், பேச்சு நடத்தி சமாதானம் செய்து, திருமணத்தைநடத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், இன்னும் ஏராளமான கடிதங்கள் மிகவும் அற்ப காரணங்களுக்காக அனுப்பப்படுகின்றன என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் வேதனைப்படுகிறார்கள். சண்டிகரில் இருக்கும் பிரதமர் அலுவலகத்தின் குறைதீர்ப்பு மையம் இருக்கிறது, அங்கிருந்து கடிதங்கள் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்குதான் இப்படிப்பட்ட கடிதங்கள் வந்து சேர்கின்றன.
சண்டிகர் பிரதமர் அலுவலகத்துக்கு வரும் கடிதங்களில் 60 சதவீதம் இதுபோல மிகவும் அற்ப காரணங்களுக்காக கடிதங்கள் வருகின்றன. சண்டிகர் போலீசார் அனைத்து சம்பவங்களுக்கும் தாமதாக வருகிறார்கள் ஆதலால், அவர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுங்கள் என்று ஒரு கடிதம் வந்துள்ளது.
என் வீட்டில் வளர்த்த பூச்செடியில் இருந்து தினமும் யாரோ பூக்களை பறித்து செல்கிறார்கள் அதை கண்டுபிடியுங்கள்என்றும் கூட கடிதம் வருகின்றன என பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறுகிறார்கள்.