நடுக்கடலில் இலங்கை கொடியுடன் எல்லைப் பலகை - தமிழக மீனவர்களை தடுக்க நடவடிக்கை

 
Published : May 07, 2017, 10:10 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
நடுக்கடலில் இலங்கை கொடியுடன் எல்லைப் பலகை - தமிழக மீனவர்களை தடுக்க நடவடிக்கை

சுருக்கம்

Border board with srilanka flag in the middle of the ocean

இலங்கையில் இருந்து 5-வது மணல் திட்டில் இலங்கை கொடியுடன் எல்லைப் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தனுஷ்கோடியில் இருந்து 5-வது மணல் திட்டில் இந்தியாவும் எல்லைப் பெயர் பலகை வைத்துள்ளது

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கிறபோது, அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதில் மத்திய அரசு தலையிட்டு, கைது செய்யப்படுகிற மீனவர்களை விடுவித்து வருகிறது.

அதே நேரத்தில் இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இரு தரப்புக்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் கடல் எல்லை தெரியாமல்தான் எல்லை தாண்டி சென்று விடுவதாக தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்காக நடுக்கடலில் இலங்கை எல்லைப் பலகை ஒன்றை வைத்துள்ளது. இலங்கையில் இருந்து 5-வது மணல் திட்டில் இலங்கை கொடியுடன் இது வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனுஷ்கோடியில் இருந்து 5-வது மணல் திட்டில் இந்தியாவும் எல்லைப் பெயர் பலகை வைத்துள்ளது. ஆனால் இது எந்த விதத்தில் மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன் பிடிக்காமல் இருக்க உதவும் என தெரியவில்லை என மீனவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!