booker prize 2022: சர்வதேச புக்கர் விருது வென்ற முதல் இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ: யார் இவர்?

By Pothy RajFirst Published May 27, 2022, 12:53 PM IST
Highlights

booker prize 2022 :டெல்லியைச் சேர்ந்த இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ரெட் சமாதி  நாவலுக்கு பெருமை மிகு சர்வதேச புக்கர் விருது  கிடைத்துள்ளது. சர்வதேச புக்கர் விருது வென்ற முதல் இந்தி எழுத்தாளர், எந்த இந்திய மொழிகளுக்கு கிடைத்த முதல் விருதாகும். ரெட் சமாதி நாவல் ஆங்கிலத்தில் “டாம்ப் ஆப் சான்ட்” (Tomb of sand) என்ற பெயரில் ராக்வெல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது

டெல்லியைச் சேர்ந்த இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ரெட் சமாதி  நாவலுக்கு பெருமை மிகு சர்வதேச புக்கர் விருது  கிடைத்துள்ளது. சர்வதேச புக்கர் விருது வென்ற முதல் இந்தி எழுத்தாளர், எந்த இந்திய மொழிகளுக்கு கிடைத்த முதல் விருதாகும். ரெட் சமாதி நாவல் ஆங்கிலத்தில் “டாம்ப் ஆப் சான்ட்” (Tomb of sand) என்ற பெயரில் ராக்வெல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது

புக்கர் விருது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 2022ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் விருது, இந்திய எழுத்தாளர் காதீஞ்சலி ஸ்ரீ எழுதிய டாம்ப் ஆஃப் சான்ட் என்ற நாவலுக்கு அறிவிக்கப்படுகிறது என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கர் விருது வென்றவர்களுக்கு 50ஆயிரம் பவுண்ட் ஸ்டெர்லிங் பரிசாக வழங்கப்படும். டாம்ப் ஆப் சான்ட் நாவல் என்பது, சுதந்திரத்துக்கு முன்பாக நடந்த பிரிவிணைக்குப்பின், கணவர் இறந்தபின் வயதான முதிய பெண்ணுக்கு ஏற்படும் நிலையை அனுபவங்களஇந்த கதை விளக்குகிறது

யார் இந்த கீதாஞ்சலி
65 வயதான கீதாஞ்சலி ஸ்ரீ டெல்லியைச் சேர்ந்தவர். இதற்கு முன் கீதாஞ்சலி ஸ்ரீ ஏராளமான சிறு கதைகளையும், 5 நாவல்களையும் எழுதியுள்ளார். 1987ம் ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ முதன் மதுலில் பெர் பத்ரா என்ற கதையை எழுதினார். இந்த கதை ஹான்ஸ் என்ற வார இதழில்முதலில் வெளிவந்தது. 

2000ம் ஆண்டு கீதாஞ்சலி எழுதிய மாய் என்ற நாவலுக்கு கிராஸ்வேர்டு புக் விருது கிடைத்தது. இந்த மாய் நாவல், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலம், உருது, செர்பியன், கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. மாய் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக நிதா குமாருக்கு சாஹித்ய அகாமி விருதும் கிடைத்தது

கீதாஞ்சலி ஸ்ரீ 2-வதாக ஹமாரா சஹர் அஸ் பராஸ் என்ற நாவலை எழுதினார்.அதன்பின் 2006ம் ஆண்டு காலி ஜாக் என்ற நாவலை கீதாஞ்சலி எழுதினார். இந்த நாவல் 2006ம் ஆண்டு ஆங்கிலத்தில் நிவேதிதா மேனன் என்பவரால் மொழி  பெயர்க்கப்பட்டது. 
 

click me!