குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி... மெக்டொனால்டு கடைக்கு அதிரடி சீல்..!

Published : May 27, 2022, 09:45 AM IST
குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி... மெக்டொனால்டு கடைக்கு அதிரடி சீல்..!

சுருக்கம்

அகமதாபாத்தில் உள்ள மெக்டொனால்டு கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இறந்த நிலையில் கிடந்ததை அடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

அகமதாபாத்தில் உள்ள மெக்டொனால்டு கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இறந்த நிலையில் கிடந்ததை அடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இரண்டு பர்கர்கள் மற்றும் இரண்டு கிளாஸ் கோககோலாவை அவர்கள் ஆர்டர் செய்துள்ளனர். பரிமாறப்பட்ட கோககோலாவை குடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பல்லி இறந்த நிலையில் குளிர்பானத்தில் மிதந்ததைப் பார்த்து பார்கவ் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தனது செல்போனில் பல்லி குளிர்பானத்தில் மிதப்பதை வீடியோவாக பதிவேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தில் பார்கவ் புகார் அளித்ததை அடுத்து மெக்டொனால்டு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!