வீரர்களை விரட்டிவிட்டு நாயுடன் வாக்கிங் சென்ற ஐஏஎஸ் தம்பதிக்கு சரியான ஆப்பு.. மத்திய அரசு அதிரடி..!

By vinoth kumarFirst Published May 27, 2022, 9:00 AM IST
Highlights

டெல்லி அரசின் வருவாய்துறை முதன்மை செயலாளர் சஞ்சீவ் கிர்வார் மற்றும்  அவருடைய மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரிங்கு துக்கா ஆகியோர் அங்கு நாயுடன் வாக்கிங் வருவதற்காக வீரர்களை இரவு 7 மணிக்கே பயிற்சியை முடிக்க உத்தரவிடப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டெல்லி தியாகராஜா ஸ்டேடியத்தில் வீரரர்களை விரட்டியடித்து நாயுடன் வாக்கிங் செல்ல ஐஏஎஸ் அதிகாரி தம்பதி மத்திய அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் விளையாட்டு வீரா்கள், குறிப்பாக தடகள வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு தியாகராஜா மைதானம் உள்ளது. இங்கு வீரர்கள் இரவு 8.30 மணி வரையும் பயிற்சி மேற்கொள்வார்கள். இந்த சூழலில் டெல்லி அரசின் வருவாய்துறை முதன்மை செயலாளர் சஞ்சீவ் கிர்வார் மற்றும்  அவருடைய மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான ரிங்கு துக்கா ஆகியோர் அங்கு நாயுடன் வாக்கிங் வருவதற்காக வீரர்களை இரவு 7 மணிக்கே பயிற்சியை முடிக்க உத்தரவிடப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சஞ்சீவ் கிர்வார் அங்கு சுமார் 30 நிமிடம் தனது நாயுடன் சென்று நடைபயிற்சி செய்து வருவது தெரிய வந்தது. இதுதொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சஞ்சீவ் கிர்வார் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிக்கும், அவரது மனைவியை அருணாசலப் பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

click me!