கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பு!

Published : Apr 28, 2025, 12:31 PM ISTUpdated : Apr 28, 2025, 01:18 PM IST
கேரள முதல்வர்  பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பு!

சுருக்கம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bomb threat received at Kerala CM Pinarayi Vijayan's house: கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது மட்டுமின்றி ராஜ்பவனில் வெடிகுண்டு வைப்பதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நிதிச் செயலாளரின் மின்னஞ்சலுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது. கேரளாவில் திரையுலகினர் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு எதிராக முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெடிகுண்டு வைப்பதாக மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. 

கேரளாவில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் 

திருவனந்தபுரம் போக்குவரத்துக் கமிஷனர் அலுவலகம் மற்றும் நெடும்பாசேரி விமான நிலையத்திற்கும் மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பினராயி விஜயன் வீடு உள்ளிட்ட வெடிகுண்டு மிரட்டல் வந்த இடங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள். போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகளின் மூலத்தை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. 

காவல் துறை திணறல் 

அரசு அலுவலகங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், நீதிமன்றங்கள், வங்கிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் போன்ற இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கடந்த சில நாட்களாகப் பல செய்திகள் வந்துள்ளன.  மணிக்கணக்கில் தேடியும் எதுவும் கிடைக்காததால், காவல்துறையும் வெடிகுண்டு நிபுணர்களும் திணறி வருகின்றனர். டார்க் வெப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரியிலிருந்து தினமும் இந்த மிரட்டல் செய்திகள் வருவதால், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிரட்டல் தொடர்ந்தாலும், மூலத்தைக் கண்டுபிடிக்கத் தனிப்படை அமைக்கக் கூட காவல்துறை தயாராக இல்லை.

மிரட்டல் விடுக்கும் சைக்கோ நபர் யார்?

காவல்துறையினர் திணறுவதைப் பார்த்து ரசிக்கும் சைபர் சைக்கோதான் இந்த மோசடி மின்னஞ்சல்களுக்குப் பின்னால் இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. டார்க் வெப்பில் ஐபி மூலம் பதிவுசெய்யப்பட்ட ஹாட்மெயிலில் இருந்துதான் இந்த மின்னஞ்சல்கள் வருகின்றன. தமிழ்நாடு அரசியல் குறித்த பல தகவல்கள் இந்த மின்னஞ்சல்களில் உள்ளன. மின்னஞ்சலின் மூலத்தைத் தேடியும் காவல்துறையால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால், அதிகபட்ச தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மைக்ரோசாப்ட்டுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. 

சோதனையின்போது தேனீக்கள் தாக்கின 

திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, சோதனையின் போது தேன்கூடு கலைந்து, ஊழியர்கள் மற்றும் மனுதாரர்களைத் தேனீக்கள் தாக்கின. இதையடுத்து, கலெக்டரின் போலி மின்னஞ்சல் முகவரியிலிருந்து மன்னிப்பு கேட்டு மற்றொரு செய்தி வந்தது. இதனால்தான் சைபர் சைக்கோதான் இதன் பின்னணியில் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

பிரதமர் மோடி 2ம் தேதி கேரளா வருகை 

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் திருவனந்தபுரத்தில் மட்டும் இதுபோன்ற 12 மிரட்டல்கள் வந்துள்ளன. பிரதமர் மோடி மே 2 ஆம் தேதி கேரளா சென்று விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்த நிலையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
மக்களின் துயரத்தை பேசாத பிரதமர்.. எப்போதும் நேரு பற்றியே கவலை.. மோடியை சாடிய காங். எம்.பி.!