
டெல்லியில் உள்ள நயா பஜார் பகுதியில் இன்று நண்பகல் திடீரென மர்ம பொருள் வெடித்துச் சிதறியது. இதில் ஒருவர் பலியானார், 5 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வெடிகுண்டு விபத்தா? அல்லது பட்டாசுகள் ஏதேனும் வெடித்ததா? என்பது குறித்து போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லி வடக்கு மண்டல போலீஸ் இணை ஆணையர் வீரேந்திர சாகல் கூறுகையில், “ நயா பஜார் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் திடீரென மர்ம பொருள் வெடித்துச் சிதறியதாக தகவல் கிடைத்து. இந்த வெடிபொருள் வெடித்ததில் ஒரு பலியானார், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்களின் முதல் கட்ட விசாரணையில் பட்டாசுகளைக் கொண்டு வந்த ஒருவர், பீடியை குடித்து விட்டு பையில் போட்டதால் வெடித்து சிதறியதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் பதற்றம் நிலவியதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்களும் பீதியில் உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.