
பொது சொத்துக்களையும் சேதப்படுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னிபாத் என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. நான்கு ஆண்டுகள் முடிந்ததும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்தவர்களில், 75 சதவிகிதம் பேர் பாதுகாப்பு படையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனால், ராணுவத்தில் சேர உடற்தகுதியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் வேலை என்றால் அதற்கு பின்னர் நிலையான வேலை பெற, ஏற்கனவே படித்து தயாராக இருக்கும் மாணவர்களுடன் போட்டியிட முடியாது என்றும் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க.!! ஓபிஎஸ் ஆப்சென்ட்..தொடரும் ஒற்றை தலைமை சர்ச்சை !
அதன் ஒருபகுதியாக பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலையில் டயர்களை கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், ரயில் மறியலில் ஈடுபட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்நிலையில் அரியானாவில் உள்ள குருகிராமில் போராட்டத்தை நிறுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பீகாரின் மந்திபூரா பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைமூர் மாவட்டம் பபுவா நகரில் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று சப்ரா ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் என்ஜினுக்கு போராட்டக்கார்கள் தீ வைத்தனர்.
ஆரா ரயில் நிலையத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் மேசை, நாற்காலிகளை வீசியெறிந்து தீ வைத்து கொளுத்தினர். அதைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வட மாநிலங்கள் முழுக்க பற்றி எறிவதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : Agnipath Scheme Protest: அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு மாத ஊதியம் எவ்வளவு?