மும்பை கடற்கரையில் 56 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 21 பயணிகள் மீட்பு!

By Rsiva kumar  |  First Published Dec 18, 2024, 8:59 PM IST

Mumbai Boat Accident : மும்பை கடற்கரையில் 56 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.


Mumbai Boat Accident : இந்தியாவின் நிதி தலைநகர் என்று சொல்லப்படும் மும்பை கடற்கரையில் கிட்டத்தட்ட 56 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பிரஹன்மும்பை மாநகராட்சி அறிக்கையில் கூறியுள்ளது. எலிபெண்டா குகைகளிலிருந்து நீல்கமல் என்ற படகானது மும்பையின் பிரபலமான கேட்வே ஆஃப் இந்தியா அருகில் சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கிராமத்தில் மின்சாரம், செல்போன் இல்லாமல் வாழும் மக்கள்! எங்குள்ளது தெரியுமா?

Tap to resize

Latest Videos

undefined

இது குறித்து பிரஹன்மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: படகில் சென்ற 56 பயணிகளில் 21 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒருவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதோடு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5 பணியாளர்களுடன் சென்ற படகானது விரைவு படகு மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து கப்பலிலிருந்த பயணி ஒருவர் கூறியிருப்பதாவது: விரைவு படகானது எங்களது படகில் மோதியது. இதனால், எங்களது படகில் தண்ணீர் வர தொடங்கியது. இதையடுத்து படகு முழுவதும் தண்ணீர் வந்ததைத் தொடர்ந்து ஓட்டுநர் லைஃப் ஜாக்கெட் அணிந்து கொள்ளுமாறு எச்சரித்தார் என்றார்.

 

A boat carrying around 56 people capsized off the coast of India's financial capital of Mumbai on Wednesday, a statement from the local authority said. A total of 21 people were rescued, of which one was declared dead, the Brihanmumbai Municipal Corporation said in a…

— Mahalingam Ponnusamy (@mahajournalist)

 

click me!