காஷ்மீரில் தொடரும் பதற்றம்...! பேருந்தில் குண்டு வெடிப்பு... ஒருவர் பலி... 28 பேர் காயம்..!

By vinoth kumarFirst Published Mar 7, 2019, 5:30 PM IST
Highlights

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் கீழ் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் கீழ் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் சமீப காலமாக வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எல்லைகள் அவ்வப்போது தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில் ஜம்முவில் ரகுநாத் பஜார் பேருந்து நிலையத்தில் எப்போது மக்கள் பரபரப்பாக காணப்படும்.

இங்கு நின்றுக்கொண்டிருந்த பேருந்தின் கீழ் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதை மர்ம நபர் ஒருவர் குண்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 28 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு கையெறி குண்டை வீசிய நபரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜம்மு நகரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இது மூன்றாவது கையெறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!