
கர்நாடக மாநிலத்தில் மே10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மைசூரில் பிரதமர் ரோடு ஷோவில் ஈடுபட்டபோது அவரது வாகனம் நோக்கி மொபைல் போன் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், பிரதமரை நோக்கி பூக்களை வீசிக்கொண்டிருந்த பெண் பாஜக தொண்டர் ஒருவர் உற்சாகத்தில் தன் கையில் இருந்த செல்போனையும் வீசி ஏறிந்துவிட்டார் எனவும் எந்த ஒரு தவறான நோக்கத்திலும் விசப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சமூக நீதியைக் காப்பாற்றவே, காங்கிரஸ் செய்த தவறை திருத்துகிறோம்! அமித் ஷா அதிரடி
பிரதமர் மோடி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் நின்று ரோட்ஷோவில் ஈடுபட்டிருந்தார். பிரதமர் மோடி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி கை அசைத்துக்கொண்டு சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. திடீரென வீசப்பட்ட செல்போன் பறந்து வந்து வாகனத்தின் பானட்டில் விழுந்தது. பிரதமருடன் வந்த சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் (எஸ்பிஜி) அதனைக் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினர்.
"பிரதமர் எஸ்பிஜியின் பாதுகாப்பில் இருந்தார். அந்த பெண் பாஜக தொண்டர். எஸ்பிஜி குழுவினர் மொபைல் போனை சோதனையிட்டுவிட்டு, அதை அவரிடம் திருப்பிக் கொடுத்தனர்" என கூடுதல் காவல்துறை இயக்குநர் அலோக் குமார் கூறியுள்ளார். இன்று கர்நாடக காவல்துறை மொபைல் வீசிய அந்தப் பெண்ணை அழைத்து அவரிடம் வாக்குமூலம் பெற உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மொபைல் வீச்சு சம்பவம் நடைபெற்றபோது மைசூரு-குடகு எம்பி பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ். ஈஸ்வரப்பா, எஸ்.ஏ. ராமதாஸ் ஆகியோரும் பிரதமருடன் வாகனத்தில் இருந்தனர்.
களைகட்டிய திருச்சூர் பூரம் கொண்டாட்டம்! அதிகாலை வானவேடிக்கையுடன் முடிகிறது!