மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக கிஷன் ரெட்டி இருந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு வீட்டில் இருந்த போது நேற்று இரவு 10.50 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக கிஷன் ரெட்டி இருந்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு வீட்டில் இருந்த போது நேற்று இரவு 10.50 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்கள் அவரை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கார்டியோ நியூரோ மையத்தின் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- சமூக நீதியைக் காப்பாற்றவே, காங்கிரஸ் செய்த தவறை திருத்துகிறோம்! அமித் ஷா அதிரடி
அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க;- IRCTC : இனி ஒருவருடைய ரயில் டிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. முழு விபரம்