தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் பாஜகவுக்கு ஒண்ணும் கிடைக்காது.. மம்தா பானர்ஜியின் தாறுமாறு கணிப்பு!

By Asianet TamilFirst Published May 13, 2019, 8:37 AM IST
Highlights

 மத்தியப் பிரதேசத்திலும்கூட பாஜக நிச்சயம் தோல்வி அடையும். மேற்கு வங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸ் எல்லா தொகுதிகளையும் கைப்பற்றும். மத்தியில் புதிய அரசை அமைப்பதில் திரிணாமூல் காங்கிரஸ் முக்கியப் பங்கை வகிக்கும்.
 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு, மேற்குவங்காளம் உள்பட 7 மாநிலங்களில் ஓரிடத்தில்கூட பாஜக வெல்லாது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்காளத்தில் இறுதி கட்டமாக மே 19 அன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்துவருகிறார். 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள  ஹரோவா நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது, “இந்த முறை இந்தியா முழுவதுமே எந்த மாநிலத்திலும் பாஜகவால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியாது. உ.பி.யில் இந்த முறை பாஜகவுக்கு 13 அல்லது 17 தொகுதிகள் கிடைத்தால் பெரிய விஷயம்.

 
மேற்கு வங்காளம், தமிழ் நாடு, ஆந்திரா, கேரளம்,  ராஜஸ்தான், பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஓரிடத்தில்கூட பாஜகவால் வெற்றி பெற பெறாது. மத்தியப் பிரதேசத்திலும்கூட பாஜக நிச்சயம் தோல்வி அடையும். மேற்கு வங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸ் எல்லா தொகுதிகளையும் கைப்பற்றும். மத்தியில் புதிய அரசை அமைப்பதில் திரிணாமூல் காங்கிரஸ் முக்கியப் பங்கை வகிக்கும். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜ ஆகிய கட்சிகள் எல்லாம் ஒரே நிலைப்பாடு கொண்ட கட்சிதான். பாஜகவை திரிணாமூல் காங்கிரஸ் மட்டுமே எதிர்க்க துணிவுள்ள கட்சியாக இருக்கிறது.” என்று மம்தா பானர்ஜி பேசினார். 

click me!