ஆந்திராவில் பயங்கர விபத்து ! 13 பேர் பரிதாபமாக பலியான சோகம் !!

Published : May 11, 2019, 11:05 PM IST
ஆந்திராவில் பயங்கர விபத்து ! 13 பேர் பரிதாபமாக பலியான சோகம் !!

சுருக்கம்

ஆந்திராவில் ஆம்னி பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டு  விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம் வேல்துருத்தி என்ற இடத்தில் தனியார் நிறுவன ஆம்னி பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்து வேன் மின்னல் வேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

பேருந்தும் மற்றும் வேனில் இருந்தவர்களின் கூக்குரல் கேட்டு அப்பகுதியில் இருந்து மக்கள் ஒடி வந்து விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டனர். 
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தகவல் அறிந்து போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களுடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்