விசாரணை என்ற சாக்கில் தன்னை கைது செய்ய பாஜக திட்டமிடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புதிய கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதேசமயம், கலால் கொள்கையுடன் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால், அதனை பெற்றுக் கொள்ளாமல் அவர் புறக்கணித்து வருகிறார்.
நாகர் பாணி கட்டடம்.. 5 மண்டபங்கள்.. அயோத்தி ராமர் கோயிலின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
அமலாக்கத்துறை இதுவரை அனுப்பிய மூன்று சம்மன்களையும் பெறாமல் புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், தனக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைக்கு ஆஜராகுமாறு மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதனால், ஆம் ஆத்மி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொண்டர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி காங்கிரஸ்: ஒய்.எஸ்.ஷர்மிளா புகழாரம்!
இந்த நிலையில், விசாரணை என்ற சாக்கில் தன்னை கைது செய்ய பாஜக திட்டமிடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை சம்மன் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை; மாறாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ED समन पर मेरी प्रेस वार्ता। https://t.co/NB9Lty67jL
— Arvind Kejriwal (@ArvindKejriwal)
அதில் பேசும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஊழல் இல்லை என்பதுதான் உண்மை. பாஜக என்னை கைது செய்ய நினைக்கிறது. எனது மிகப்பெரிய சொத்து எனது நேர்மை. அவர்கள் அதைக் குறைக்க விரும்புகிறார்கள். எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியுள்ளனர். பாஜகவின் நோக்கம் என்னிடம் விசாரணை நடத்துவது அல்ல, மக்களவைத் தேர்தலுக்கு என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது. விசாரணை என்ற சாக்கில் என்னை அழைத்து பிறகு கைது செய்ய நினைக்கிறார்கள்.” என குற்றம் சாட்டியுள்ளார்.