மருத்துவமனைகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் ரத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு முற்றிப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது
மருத்துவமனைகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் ரத்தத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு முற்றிப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.. ரத்தத்திற்கு செயலாக்கக் கட்டணங்கள் தவிர அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "இரத்தம் விற்பனைக்காக அல்ல" என்ற நோக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து இரத்த மையங்களுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது..
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. மேலும் இந்த புதிய முடிவைக் கடைப்பிடிக்கவும், தேசிய ரத்தமாற்றக் கவுன்சிலின் (என்பிடிசி) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொண்டுள்ளது.
சராசரியாக தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் ஒரு யூனிட் ரத்தத்திற்கு ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை வசூலிக்கின்றன. ரத்த பற்றாக்குறை அல்லது அரிதான ரத்தக் வகைகள் இருக்கும் பட்சத்தில் ரூ.10,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், இவை தவிர செயலாக்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
"Gynophobia".. ஆண்களே உஷார்! இந்த நோய் உங்கள் வாழ்க்கையை பந்தாடும்...எப்படி தெரியுமா..?
இருப்பினும், புதிய வழிகாட்டுதல்களின்படி, ரத்தம் அல்லது ரத்தக் கூறுகளுக்கு ரூ.250 முதல் ரூ.1,550 வரையிலான செயலாக்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். உதாரணமாக, முழு ரத்தம் அல்லது நிரம்பிய இரத்த சிவப்பணுக்களை விநியோகிக்கும்போது, ரூ.1,550 கட்டணம் விதிக்கப்படலாம், அதேசமயம் பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்டுக்கு, ஒரு பேக்கிற்கு ரூ.400 வசூலிக்கப்படும். ஆன்டிபாடி சோதனை உட்பட இரத்தத்தில் கூடுதல் பரிசோதனைகளை நடத்துவதற்கான பிற கட்டணங்களையும் அரசாங்க விதிகள் நிர்ணயிக்கின்றன.
மத்திய அரசின் இந்த நகர்வு ஏன் முக்கியமானது?
இந்த நடவடிக்கை நோயாளிக்கு உதவும் என்று மருத்துவ நிபுனர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தலசீமியா, அனீமியா போன்ற ரத்தக் கோளாறுகள் அல்லது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கு வழக்கமான ரத்தமாற்றம் செய்பவர்களுக்கு. உறவினர்கள் அல்லது நண்பர்கள் இரத்த தானம் செய்வது எப்போதும் சாத்தியமில்லை. எனவே மத்திய அரசின் இந்த முடிவு ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
"சில கார்ப்பரேட் மருத்துவமனைகளால் மேற்கொள்ளப்படும் அதிக விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையைத் தடுக்க இந்த முடிவு உதவும்" என்று தேசிய தலசீமியா நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜே.எஸ். அரோரா கூறினார். அரசாங்கத்தின் முடிவைப் பாராட்டிய டாக்டர் அரோரா, எந்தவொரு சுகாதாரப் பராமரிப்பு வளாகத்திற்கும் ஏற்படும் செலவினங்களை மீட்டெடுக்க, கட்டணம் விதிக்க அனுமதிக்கப்படும் கட்டணங்கள் போதுமானவை என்று கூறினார்.
"தலசீமியா என்பது ஒரு மரபணு ரத்தக் கோளாறாகும், இந்த நோயாளிகள்வழக்கமான ரத்தமாற்றத்தின் மூலம் உயிர்வாழ்வார்கள் மற்றும் தலசீமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை இரத்தமாற்றம் செய்யப்படும்.. எனவே ஒவ்வொரு முறையும் ரத்தம் தேடுவதற்கு கட்டணம் செலுத்துவது என்பது இவர்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும். எனினும் அரசின் இந்த நடவடிக்கை இந்த நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.
இதய நோயாளிகளே! இந்த அளவுக்கு மட்டும் தண்ணீர் குடிச்சா போதுமாம்..நிபுணர்களே சொல்லுறாங்க...
அரசாங்கக் கடிதம் என்ன சொல்கிறது?
மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அமைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கிய கடிதத்தின்படி, "ரத்தம் விற்பனைக்கு இல்லை என்று நிபுணர்கள் குழு தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் “ மருந்து ஆலோசனைக் குழுவின் 62வது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. "இது சப்ளைக்கு மட்டுமே மற்றும் செயலாக்க செலவு மட்டுமே இரத்த மையத்தால் வசூலிக்கப்படும்" என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகளுக்கான செயலாக்கக் கட்டணங்களை மீட்டெடுப்பதற்கான NBC திருத்தப்பட்ட வழிகாட்டுதல் தொடர்பான ஆலோசனையை அனைத்து ரத்த மையங்களுக்கும் வழங்குவதற்கு இது கருத்து தெரிவிக்கப்பட்டது.