பாஜக தலைவர்கள் என்னை பார்த்து நாய் மாறி குரைக்கிறார்கள்... சர்ச்சையை கிளப்பிய சித்தராமையா கருத்து!!

By Narendran SFirst Published Jun 9, 2022, 9:10 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாடப்புத்தகங்கள் காவி மயமாக்கப்படுவதற்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் விதான் சவுதாவில் நடத்திய போராட்டத்தில் கலந்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர், நான் தனித் தனியாக பேசும் போது, பாஜகவை சேர்ந்த 25 பேர் முதோல் (வேட்டை நாய்கள்) போல எனக்கு எதிராக குரைக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரைக்கும் போது நான் மட்டுமே பேச வேண்டும், எங்கள் கட்சியை சேர்ந்த வேறு யாரும் பேச மாட்டார்கள்.

அதனால்தான் எங்கள் அலுவலகத்தில் இருந்து புத்தகங்களை விநியோகித்துள்ளோம். பாடப்புத்தகத்தை ஆர்த்தடாக்ஸ் ஆர்.எஸ்.எஸ் காரரான ரோஹித் சக்ரதீர்த்தா திருத்தியுள்ளார். அதைத் திருத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று நம்புகிறேன், இல்லையெனில் நாங்கள் வீதிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதில் பாஜக தலைவர்களை வேட்டை நாயுடன் ஒப்பிட்டு பேசியது தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கேரவன் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படும் முதோல் ஹவுண்ட், பொதுவாக கர்நாடகாவில் உள்ள கிராம மக்களால் வேட்டையாடுவதற்கும் காவல் நாய்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. எழுத்தாளர் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில் 2020 இல் அமைக்கப்பட்ட கர்நாடக அரசு பாடநூல் திருத்தக் குழு, சமீபத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்களையும், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான கன்னட மொழி பாடப்புத்தகங்களையும் திருத்தியது.

click me!