குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு ..

By Thanalakshmi VFirst Published Jun 9, 2022, 1:10 PM IST
Highlights

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜுலை 24 ல்  முடிவதால் தேர்தல் நடக்கிறது.
 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜுலை 24 ல்  முடிவதால் தேர்தல் நடக்கிறது.

தற்போதைய குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைவதால் அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இந்நிலையில், குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்த குடியரசுத்தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பா.ஜ.க அரசு நிறுத்தும் வேட்பாளர் யாராக இருக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்பு அதிக உள்ளது.

மேலும் படிக்க: 25 ஆண்டுகால பிரச்சனைக்கு ஒரே அறிவிப்பில் முற்றுப் புள்ளி.. 3500 குடும்பங்களில் பால் வார்த்த முதல்வர் ஸ்டாலின்

click me!