ஜூலை 18- ல் குடியரசுத் தலைவர் தேர்தல்... ஜூலை 21 ல் வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

Published : Jun 09, 2022, 03:44 PM IST
ஜூலை 18- ல் குடியரசுத் தலைவர் தேர்தல்... ஜூலை 21 ல் வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

சுருக்கம்

அடுத்த மாதம் ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்  புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவியேற்பார் என்று  தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.  

அடுத்த மாதம் ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 
புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25-ம் தேதி பதவியேற்பார் என்று  தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் ராஜுவ் குமார்,” குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜூலை 18 ல் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜூலை 21 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.  மேலும் ஜூன் 15 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜூன் 29 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும் . ஜூன் 30 தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். ஜூலை 2 ஆம் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாஜக சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் தற்போது , குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் புதிய குடியரசு தலைவர் ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

மேலும் படிக்க: குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு .

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!