
பாஜகவிற்கு வாக்களிப்பதன் மூலம் பெண்கள் அச்சமின்றியும், பலவரம் இல்லாத சூழ்நிலையிலும் வாழ முடியும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹரான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி;- முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு அவசியம். முஸ்லிம் பெண்களை முத்தலாக்கிலிருந்து விடுவித்தது பாஜக அரசு. முஸ்லிம் பெண்கள் பாஜக அரசை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியபோது, எதிர் அணியினர் கவலையடைந்தனர். பாஜக ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுடனும் நிற்கிறது என்றார்.
முஸ்லிம் சகோதரிகளை கடந்த காலத்துக்குள் மீண்டும் தள்ளுவதற்கு அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் வன்முறை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டியதும் பெண்களை அச்சத்தில் இருந்து விடுவிக்க வேண்டியதும் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டியதும் அவசியமாக உள்ளது. பிரதமர் விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பணம் சிறு விவசாயிகளுக்கு தொடர்ந்து சென்றடைய வேண்டும். சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஆகியவை ஏழைகளுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும். அதற்கு உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு மீண்டும் அமைய வேண்டியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் டெல்லி-டேராடூன் விரைவுச்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை திட்டங்களை விரைந்து முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், குடும்ப அரசியல் கட்சி சமாஜ்வாதி கட்சி. மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. மின்சார வசதி செய்தது கொடுப்பதாக கூறியவர்கள் மாநிலத்தை இருளில் வைத்துள்ளனர். ஆனால், தங்கள் மாவட்டத்தை மட்டும் பிரகாசத்துடன் வைத்திருந்தனர் என பிரதமர் மோடி எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
கர்நாடகா மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஹிஜாப் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் மீதான் ஒடுக்குமுறை குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.