லோக்சபாவில் ராகுல் காந்தி நுழைந்த முதல் நாளே அதிர வைத்த பாஜக; சீனாவுடன் கைகோர்த்ததா காங்கிரஸ்?

By Dhanalakshmi G  |  First Published Aug 7, 2023, 3:01 PM IST

இந்தியாவுக்கு எதிராக சீனாவின் நிதியில் இயங்கி வரும் நியூஸ்கிளிக் இணையத்தை காங்கிரஸ் ஆதரித்தாக லோக்சபாவில் பாஜக குற்றம்சாட்டியது.


கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் சூரத் நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் தடை செய்ய மறுத்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதையடுத்து, மீண்டும் எம்பியாக ராகுல் காந்தி இன்று லோக்சபாவில் நுழைந்தார். 

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நியூஸ்கிளிக் ஆன்லைன் செய்தி இணையதளம் தொடர்பான குற்றச்சாட்டை பாஜக முன் வைத்தனர். இந்த இணையதளம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையதளம் என்றும், இது மிகவும் ஆபத்தான இணையதளம் என்றும், சீனாவின் சித்தாந்தத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக இந்த இனையத்தை நடத்தி வருகின்றனர் என்றும் பாஜக எம்பிக்கள் குற்றம்சாட்டினர். இந்த இணையத்தை நெவிலி ராய் சிங்கம் என்பவர் நடத்தி வருவதாகவும், இவருக்கு சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நிதியுதவி அளிக்கிறது என்றும் நியூயார்க் டைம்ஸ் நடத்தி இருந்த புலனாய்வில் தெரிய வந்து இருப்பதாக தெரிவித்தனர். அந்த மாதிரியான இணையதளத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தனர். 

Tap to resize

Latest Videos

சீனாவுக்காக இந்தியாவில் பிரசாரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர்! சீன சதித் திட்டம் அம்பலமானது எப்படி?

இதுகுறித்து இன்று லோக்சபாவில் பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ''சீனாவில் இருந்து நியூஸ்கிளிக் இணையத்திற்கு நிதி வருகிறது. அரசுக்கு எதிராக சீனாவின் நிதி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவை உடைப்பதுதான் காங்கிரசின் செயல். காங்கிரஸ் கட்சிக்கு சீனாவில் இருந்து நிதி வருவதை தேர்தல் ஆணையம் கண்டறிந்து காங்கிரஸ் கட்சியை மூட வேண்டும்'' என்று தெரிவித்தார். 

துபேவின் குற்றச்சாட்டை அடுத்து லோக்சபாவின் பதிவில் இருந்து பாஜக எம்பியின் குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என்று லோக்சபா காங்கிரஸ் கட்சித் தலைவரும் எம்பியுமான அதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கை வைத்தார். லோக்சபா சபாநாயகருக்கு எழுதி இருந்த கடிதத்தில், ''380 சட்டப்பிரிவின் கீழ் காங்கிரஸ் கட்சி மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை நீக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று எம்பி அதிர் ரஞ்சன் தெரிவித்து இருந்தார்.

சமூக வலைதள மிரட்டல்கள் மீது என்ன நடவடிக்கை? கனிமொழி என்விஎன் சோமு கேள்விக்கு மத்திய அரசு பதில்!

இதற்கு முன்னதாக லோக்சபாவில் பேசி இருந்த தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் , ''நெவிலி ராய் சிங்கம் தனது நியூஸ்கிளிக் இணையதளத்தின் மூலம் உலக நாடுகளில் சீனாவிற்காக அரசியல் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு சீனா நிதியுதவி அளிக்கிறது. இதை நியூயார்க் டைம்ஸ் உறுதிபடுத்தியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் கூறுவதற்கு முன்பே பல நாட்களாகவே  சீனாவுக்கு நியூஸ்கிளிக் பிரச்சாரம் செய்து வருகிறது என்று இந்தியா குற்றம்சாட்டி வந்துள்ளது. காங்கிரஸ் இந்த இணையத்திற்கு சாதமாக நடந்து வருவதும், பணம் கையாடல் நடந்து இருப்பதும், இதுகுறித்து சட்ட அமலாக்கத்துறை விசாரணை துவக்கி இருந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் நலன் முக்கியம் இல்லை. அதனால் நெவிலி மற்றும் நியூஸ்கிளிக் இணையத்தை காங்கிரஸ் ஆதரித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டில், இந்தியாவில் சீன ஆர்வத்தை மேம்படுத்துவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதே காங்கிரஸ் கட்சி, சீனத் தூதரகத்திலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடைகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது அல்லவா?" என்று அனுராக் தாகூர் கேள்வி எழுப்பி இருந்தார்.

click me!