"ராமர் கோயிலை இந்தியாவில் கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும்?" - பாஜக கொக்கரிப்பு

 
Published : Feb 07, 2017, 09:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"ராமர் கோயிலை இந்தியாவில் கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும்?" - பாஜக கொக்கரிப்பு

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ராமருக்கு கோயிலை, இந்தியாவில், அதிலும் அயோத்தியில் கட்டாமல் பாகிஸ்தானிலா கட்ட முடியும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 11-ந்தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி, பாரதியஜனதா, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் எந்தநாளும் பரபரப்பாக பேசப்படும், ராமர் கோயில் விவகாரத்தை இப்போது பாரதிய ஜனதா கட்சி கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையிலும், உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டப்படும் எனபாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அந்த கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரங்களில் ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பி வருகின்றனர்.

பாரதியஜனதா கட்சியின் எம்.பி. வினய கத்தியார் சமீபத்தில் பிரசாரத்தில் பேசுகையில், “ ராமருக்கு கோயில் கட்டும் பணியை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நான் முன் எடுத்தேன். இப்போதும் அதை எழுப்புவேன். இந்த விவகாரத்துக்கு சட்டரீதியாக  போராட்டம் நடத்தி தீர்வு காண்போம். இல்லாவிட்டால் அதற்கு மேலும் நடவடிக்கை எடுப்போம்'' எனத் தெரிவித்தார்.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் பேசுகையில், “ அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில், சட்டப்பூர்வ அனுகி முடிவு எடுக்கப்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “ ராமர் கோயிலை எப்போது கட்டுவோம் என்ற சரியான காலத்தை என்னால் கூற முடியாது. ஆனால், ராமருக்கு கோயில் இந்தியாவில் அதிலும், அயோத்தியில் கட்டாமல், பாகிஸ்தானிலா கட்ட முடியும்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"