குற்றங்களை நீர்த்துப்போகச் செய்தால் நீதிமன்றம் செல்வோம்... பா.ஜனதா தலைவர் மகனுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி எச்சரிக்கை...

First Published Aug 7, 2017, 8:05 PM IST
Highlights
bjp president son arrest case... ias office warning...


இளம்  பெண்ணை விரட்டி, விரட்டி தொந்தரவு செய்து கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான பா.ஜனதா தலைவர் மகன் மீதான குற்றச்சாட்டை நீர்த்துப் போகச் செய்தால், நீதிமன்றம் செல்வோம் என்று பெண்ணின் தந்தையும், ஐ.ஏ.எஸ் அதிகாரி தெரிவித்தார்.

அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ்(வயது23). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன் இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார்(வயது27) என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை 5.கி.மீ. வரை பின்தொடர்ந்து விரட்டி, விரட்டி தொல்லை கொடுத்தனர்.  ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளான அந்த பெண், இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமீனில் வௌிவரக்கூடிய மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் தந்தையும், ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது-

இந்த வழக்கின் விசாரணையில் எங்களின் குடும்பத்தினர் யாரும் தலையிடமாட்டோம்,அதேசமயம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் எந்த விதத்திலும் வழக்கை திசை திருப்ப நாங்கள் அனுமதிக்கமாட்டோம். போலீசாரும், விசாரணையும் அதன் பணியை செய்ய அனுமதிக்கப்படும்.

விசாரணைக்கு எப்போது தேவைப்பட்டாலும், நாங்கள் ஆஜராவோம். அதேசமயம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போகச் செய்தால், நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.

இந்த விஷயத்தில் எனக்கு எந்த அளவுக்கு நெருக்கடி, அழுத்தம் வந்தாலும், என் நிலையில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. எங்களுக்கு ஆதரவு அளித்து வருபவர்களுக்கு தெரிவிக்கிறேன்.

 எங்களுடைய நோக்கம், தவறு செய்தவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் விவரம் தெரிந்த இளைஞர்கள், சட்டம் பயில்பவர்கள் ஆதலால் விளைவுகளை அறிந்து இருப்பார்கள்,   அவர்கள் செய்த குற்றத்துக்காக அவர்கள் தண்டிகப்பட வேண்டும். குற்றம் செய்த அளவைக் காட்டிலும் தண்டிக்கப்பட வேண்டாம், குற்றத்துக்கான தண்டனை என்னவே அதை அனுபவிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தினரை நாங்கள் குறை சொல்லவில்லை. அது துரதிருஷ்டவசமானது. இதற்கு அவர்களை பொறுப்பாக்கவில்லை. இந்த விஷயத்தில் நீதிவழங்குவதில் தவறு ஏற்படுமாயின், சமூகத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.

இந்த விவகாரம் என்பது, நம் நாடு ஒரு பெண்ணை சுதந்திரமாக வாழ, சக மனிதருக்கு இணையாக வாழ விடுகிறதா என்பதாகும். அந்த பெண் தவறு செய்து இருந்தால், அவள் நீதிகேட்க இந்த அளவுக்கு நம்பிக்கையை கொடுத்து இருக்குமா?. நீதி கிடைக்காவிட்டால், காட்டுமிராண்டித்தனமாக சமூகமாக இருக்கும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்

click me!