
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், நேற்று நடந்த துப்பாக்கி சண்டையில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியை பாதுகாப்புபடையினர் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது-
காஷ்மீரில் உள்ள சம்பூரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன் தினம் இரவு அந்த கிராமத்தில் பாதுகாப்புபடையினர் தீடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவர், பாதுகாப்பு படையினரே நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து திருப்பிச் சுட்டனர். இருதரப்பும் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
சுட்டுக் கொல்லபட்ட தீவிரவாதி கடந்த மாதம் 10ந்தேதி அமர்நாத் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலோடு தொடர்பு உடையவர். காஷ்மீரில் உள்ள அபு இஸ்மாயில் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், பாகிஸ்தானில் செயல்படும்லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர். இவ்வாறு தெரிவித்தனர்.