bjp: naveen jindal: nupur sharma: நபிகள்குறித்து அவதூறு: ராஞ்சி வன்முறையில் 2 பேர் உயிரிழப்பு: 10 பேர் காயம்

Published : Jun 11, 2022, 09:40 AM IST
bjp: naveen jindal: nupur sharma:  நபிகள்குறித்து அவதூறு: ராஞ்சி  வன்முறையில் 2 பேர் உயிரிழப்பு: 10 பேர் காயம்

சுருக்கம்

bjp : naveen jindal: nupur sharma:இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் அவதூறாகப் பேசியதைக் கண்டித்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.இதில் 2 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவர் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் அவதூறாகப் பேசியதைக் கண்டித்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.இதில் 2 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.

போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். போலீஸார் உள்பட 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சர்சைக்கருத்து

இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரியவாறு கருத்துத் தெரிவித்தனர். இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததால் விஷயம் பெரிதானது. இதையடுத்து நுபர் ஷர்மா, நவீன் ஜிண்டால் இருவரையும் பாஜக சஸ்பெண்ட் செய்தது. இருப்பினும் இந்த விவகாரம் அடங்கவி்லலை.

போராட்டம்

டெல்லியில் நேற்று ஜூம்மா மசூதியில் தொழுகை முடிந்தபின் 300க்கும் மேற்பட்டவ்ரகள் திடீரென கூடி போராட்டம் நடத்தினர். அதன்பின் போலீஸார் அங்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களைக் கலைத்தனர். இதேபோல உத்தப்பிரதேசம் சஹரான்பூரிலும் பாஜக தலைவர்கள் நபிகள் நாயகம் குறித்து பேசியதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.

வன்முறை

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி நகரில் பாஜக தலைவர்கள் நுபர் ஷர்மா, நவீண் ஜிண்டாலை கைது செய்யக் கோரி நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவம், போராட்டக்காரர்களைக் கலைக்கவும் போலீஸார் முயன்றனர். போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர், ஆனால் போலீஸார் மீது போராட்டக்கார்கள் கற்களை வீசி எறிந்தனர். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். 

2 பேர் உயிரிழப்பு

அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.  இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஞ்சி நகர் பிரதான சாலையில் நடந்த போராட்டத்தால் பல கடைகள் திடீரென அடைக்கப்பட்டன. ராஞ்சி நகரின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் ஊரடங்கு பிறப்பித்துள்ளனர். 

ராஞ்சி மட்டுமல்லாமல் நேற்று 9 மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் பாஜக தலைவர் நுபர் ஷர்மா, நவீண் ஜிண்டாலைக் கைது செய்யக் கோரி போராட்டம் நடந்தது. 

12 பேர் காயம்

ராஞ்சிநகர போலீஸ் ஆணையர் அன்சுமான் குமார் கூறுகையில் “ போலீஸார் நடத்திய துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களில் 8 பேர், போலீஸார் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வன்முறையில் யார் முதலில் ஈடுபட்டது என்பதை அடையாளம் கண்டு வருகிறோம்.சூழல் தற்போது இயல்பாகவும், கட்டுப்பாட்டிலும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!