என்ன சிதம்பரம் நல்லா இருக்கேளா...? ஸ்பெஷல் டைம் எடுத்து செய்யும் சு.சுவாமி!!

By sathish kFirst Published Aug 22, 2019, 11:35 AM IST
Highlights

சுப்பிரமணிய சுவாமி ஹேப்பி மூடில் இருந்தால், ஃபிரி டைம் கெடச்சா போதும் ப.சிதம்பரத்தை வெச்சு செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார், அல்வா மாதிரி ஒரு மேட்டர்  விடுவாரா? மனுஷன் ரெண்டு நாளா வெச்சு செய் செய்ன்னு செய்து கொண்டிருக்கிறார்.

சுப்பிரமணிய சுவாமி ஹேப்பி மூடில் இருந்தால், ஃபிரி டைம் கெடச்சா போதும் ப.சிதம்பரத்தை வெச்சு செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார், அல்வா மாதிரி ஒரு மேட்டர்  விடுவாரா? மனுஷன் ரெண்டு நாளா வெச்சு செய் செய்ன்னு செய்து கொண்டிருக்கிறார்.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேடப்படும் நபர் என அறிவித்த சிபிஐ, அமலாக்கப்பிரிவு 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிதம்பரத்தின்  காரை பின் தொடர்ந்து அவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்து அலேக்காக தூக்கி சென்றது. சிதம்பரத்தை தூக்கிய சில நிமிடங்களில் அவரது மகன், விசாரணை, கைது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் எங்களுக்கு புதுசு அல்ல, இதையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என சொல்லிக்கொண்டே குலுங்கி குலுங்கி அழுதார்.

ஏற்கனவே தேடப்படும் நபராக ப.சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது, இதற்கு முன்னதாகவே பிஜேபியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ப. சிதம்பரத்தை தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கும் தருணம் வந்துவிட்டது; அவரது சொத்துகளையும் முடக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். அவர் பதிவிடும் அதிகாலையில் பதிவிட்டுள்ளார் ஆனால், சிதம்பரம் தலைமறைவு என மதியம் 2 மணிக்கு சிதம்பரம் தலைவமறைவு என லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இப்படி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு  ஆக்ஷனில் குதிக்கும் முன்பே சு.சுவாமி சொல்வதே நடந்து வந்தது. எப்போதுமே சு.சுவாமி ட்வீட் படும் விமர்சனம் ஏழும், ஆனால் ப.சியை வெச்சு செய்யும் விதமாக இந்த வழக்கில் ஆர்வம் காட்டும் டிவீட்டுக்கு லட்சம் லைக்ஸ்களுக்கு மேல் குவிந்துவருவது ஆச்சரியமாக உள்ளது. 

அதே போல துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் " ப.சிதம்பரம் ஒரு குற்றவாளி மட்டும் அல்ல; கோழையும் கூட என காட்டமாக தாக்கியுள்ளார் குருமூர்த்தி. மேலும் போலி ஆவணங்கள் அடிப்படையில் நாங்கள் கைது செய்யப்பட்ட போது துணிச்சலுடன் அதை எதிர்கொண்டவர்கள் நாங்கள். அதனால்தான் ப.சிதம்பரத்தை கோழை என்கிறோம்"  என பதிவிட்டிருந்தார்.

குருமூர்த்தி கொதிக்க காரணமென்ன? 1987-ம் ஆண்டு நாட்டையே உலுக்கிக் கொண்டிருந்தது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் இது தொடர்பான கட்டுரைகளை குருமூர்த்தி எழுதி வந்த நிலையில் 1987-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி நள்ளிரவில் குருமூர்த்தி கைது செய்யப்பட்டார். அந்த குஷியில் சிக்கிய சிதம்பரத்தை தூக்குவது எப்போது என காத்துக்கொண்டிருந்தார்.

click me!