மீண்டும் மாற்றப்பட்ட சந்திராயன்- 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை.. காரணம் என்ன ?? - இஸ்ரோ தகவல்

Published : Aug 22, 2019, 11:25 AM ISTUpdated : Aug 22, 2019, 11:28 AM IST
மீண்டும் மாற்றப்பட்ட சந்திராயன்- 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை.. காரணம் என்ன ?? - இஸ்ரோ தகவல்

சுருக்கம்

சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது .

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது . ஆகஸ்ட் 14 ம் தேதியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியது . 

 20 ம் தேதி காலை  சரியாக 9 .30 மணியளவில் நிலவின் வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது . நிலவின் சுற்றுவட்டப்  பாதையை தற்போது சுற்றி வரும் சந்திராயன் 2 விண்கலம் நேற்று பகல் 12.50 மணியளவில் வெற்றிகரமாக மாற்றப்பட்டிருக்கிறது .

இஸ்ரோவின் தகவலின்படி நிலவுக்கு 114 கிலோமீட்டர் அருகிலும் 18 ஆயிரத்து 72 கிலோ மீட்டர் தொலைவிலும் சந்திரயான்- 2 விண்கலம் சுற்றி வந்து கொண்டிருக்கிறது . வரும் 28ம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள்  மாற்றப்படும் சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்றுப்பாதை  , மீண்டும்  செப்டம்பர் 1ம் தேதி  மாற்றி அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!