அன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்... 10 ஆண்டு சபதம் நிறைவேற்றம்..!

By vinoth kumarFirst Published Aug 22, 2019, 11:04 AM IST
Highlights

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான 10 ஆண்டு கால பகையை பழித்தீர்க்கவே அவரை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதான 10 ஆண்டு கால பகையை பழித்தீர்க்கவே அவரை கைது செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரம் காட்டியதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

2005-ம் ஆண்டில் சொராபுதீன் ஷேக் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர், பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக குஜராத் காவல்துறை தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதி என்பவரும் 2006-ம் ஆண்டில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த இரண்டும் போலி என்கவுன்ட்டர் என்றும், அதில், குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

இதையடுத்து, 2010-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அமித்ஷா கைது செய்யப்பட்டார். அதனால் பதவியை ராஜினாமா செய்த அமித்ஷா, மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தார். தற்போது இந்தச் சூழல் தலைகீழாக மாறும் நிலை உருவாகியுள்ளது. தற்போது அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தூசி தட்டி ப.சிதம்பரத்திற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தார். 

இந்நிலையில், இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை வலம் வந்து, சி.பி.ஐ.யை தன் கண்ணசைவில் வைத்திருந்த ப.சிதம்பரம் இன்று தன்னை கைது செய்ய டெல்லி ஜோர்பாக் இல்லத்துக்கு அதே சி.பி.ஐ. படையெடுத்து வரும் என்று நினைத்துப்பார்த்திருக்கமாட்டார். தனது 10 ஆண்டுகளாக சபதத்தை அமித்ஷா நிறைவேற்றி இருக்கிறார். 

click me!