பாஜக எம்எல்ஏ மீது துப்பாக்கி சூடு..! அவசர பிரிவில் சிகிச்சை..! பரபரப்பு தகவல்கள்..!

Published : Mar 21, 2019, 06:47 PM IST
பாஜக எம்எல்ஏ மீது துப்பாக்கி சூடு..! அவசர பிரிவில் சிகிச்சை..! பரபரப்பு தகவல்கள்..!

சுருக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹோலி கொண்டாடி விட்டு வீடு திரும்பிய பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மா மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹோலி கொண்டாடி விட்டு வீடு திரும்பிய பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மா மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதியம் 3 மணி அளவில் யோகேஷ்  வர்மா,ஹோலி பண்டிகையை கொண்டாடி விட்டு பட்டேல் நகரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது குருநானக் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்த போது  திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது அவரது காலில் புல்லட் பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் எம்எல்ஏ யோகேஷ் வர்மா. 

தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் யார் அந்த நபர் எதற்காக எம்எல்ஏவை கொள்ள முயன்று உள்ளார் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டு உள்ளது. ஹோலி பண்டிகையான இன்று, இந்த சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு  நிலவி வருகிறது

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!