விவசாயிகளின் ஓட்டுகளை மொத்தமாக அள்ளப்போகும் பாஜக... அடேங்கப்பா இத்தனை திட்டங்களா?

By vinoth kumarFirst Published Apr 8, 2019, 1:26 PM IST
Highlights

5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதனையடுத்து மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி இன்று டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

 

இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 25 லட்சம் கோடி ஒதுக்கப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டு வழங்கப்படும் என அதிரடியாக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மேலும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
60 வயதான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. சிகான் சம்மான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!